மேலும்

பிரிவு: செய்திகள்

போர்க்குற்றங்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை வெளியிடப் போகிறாராம் கம்மன்பில

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டெஸ்மன்ட் டி சில்வா சமர்ப்பித்த  அறிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள், சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிடின், தான் அதனை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

விசாரணையில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பது அரசியலமைப்பு மீறல் – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான  விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கிற்கு வழங்கவிருந்த கூடுதல் அதிகாரங்களை ஜே.ஆரே நீக்கினார் – ப.சிதம்பரம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான, ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அரசியல்தீர்வுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்கத் தயார் – ஐ.நா உதவிச்செயலர் உறுதி

சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐ.நா உதவிச் செயலர் மிரொஸ்லாவ் ஜென்கா உறுதியளித்துள்ளார்.

சமத்துவமான உறவை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது சீனா

சமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே, சிறிலங்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

ஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்

நோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.

நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சீனாவின் தயவை நாடுகிறது சிறிலங்கா

ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக வட்டியுடன் கூடிய கடன்களால், சிறிலங்கா முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிக மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.

இன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை

போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.