மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா, தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து – வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை பூமியில் விழுகிறது மர்மப்பொருள் – சிறிலங்காவின் தென்பகுதி கடலில் மீன்பிடிக்கத் தடை

விண்வெளியில் இருந்து WTF1190F என்ற மர்மப் பொருள், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் நாளை முற்பகல் விழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகதீபவின் பெயர் நயினாதீவாக மாற்றப்படாது – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்

நாகதீப தீவின் பெயரை நயினாதீவு என்று சிறிலங்கா அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாது என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அவன் கார்ட் நிறுவனம் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பு – சிறிலங்கா அதிபர் உத்தரவு

அவன் கார்ட் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்பாடுகளை ரத்துச் செய்து, குறித்த நிறுவனம் முன்னெடுத்து வந்த அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சோபித தேரரின் இறுதி நிகழ்வு இன்று – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு

மறைந்த வண.மாதுளுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையான அரச மரியாதைகளுடன் நடைபெறவுள்ளது.

சோபித தேரரின் இறுதி விருப்பம் மீறப்பட்டதா? – பரபரப்பை ஏற்படுத்திய காணொளிக்கு சங்கநாயக்கர் பதில்

மறைந்த வண.மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச் சடங்கு, அவரது இறுதி விருப்பத்துக்கு அமைய இடம்பெறவில்லை என்று, அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கான சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக சிறிஜெயவர்த்தனபுர மகா சங்கநாயக்கர் வண. மீகஹதென்னே, சந்திரசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

கடும் நிபந்தனைகளுடன் 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்றம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு  பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி

இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.