அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும்
சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை ஒழிக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி நிபந்தனை விதித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
தற்போதுள்ள கலப்பு தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகர சபையின் ஆட்சி அதிகாரம், ஈபிஆர்எல்எவ் வசமாகியதே சிறந்த உதாரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், புதிய கூட்டு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபையை, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து- தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில், பழைய டச்சு கட்டடத்தில் இந்த வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால், திறந்து வைக்கப்பட்டது.
ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது.