மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்க நீதிவான் மறுப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் விளக்கமறியலை மே 30 ஆம் நாள் வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர்

சிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் சிறிலங்கா அதிபருக்கு மற்றொரு ‘சோதனை’

கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

ஆசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்- ஈரானிய ஆன்மீகத் தலைவர்

ஆசிய நாடுகள்  இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி

சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஈரானுக்குச் சென்றார் சிறிலங்கா அதிபர்

எண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை  முன்னேற்றுவதற்கும்,  முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.