மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *