சிங்கப்பூருக்குப் பயணமானார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை அடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு, சீனா நிதி அளித்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து, கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ்.
பாரிய குற்றங்களை இழைத்த சிறிலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை, தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க.