மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக மிக்சேல் பசெலெட் நியமனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் அதிபர் மிக்சேல் பசெலெட் அம்மையார் செப்ரெம்பர் 1 ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் தொடருந்து சாரதிப் பயிற்சி

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எக்னெலிகொட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்ய நடவடிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

ரஷ்யாவுடன் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான செயலணிக் குழுவை உருவாக்க அனுமதி

ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் விடாப்பிடியால் தயானின் தூதுவர் பதவிக்கு அங்கீகாரம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சிறிலங்கா ஒரு பில்லியன் டொலர் கடன்  பெற்றுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

விஜயகலாவுக்கு எதிரான விசாரணை நிறைவு – சட்டமா அதிபருக்கு அறிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டு வந்த விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா உறுதி

ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும்  அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற, அர்ப்பணிப்புடன் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.