நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி
கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


