மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டச் செயலணிக்கு, 9 அமைச்சுக்களின் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்

தற்போதைய பொருளாதார மந்தநிலை சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளுகின்றன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வலுவான கடவுச்சீட்டு தரவரிசை – எதியோப்பியா, வடகொரியாவுடன் இணைந்த சிறிலங்கா

எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி.

இடைக்கால அரசு அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் இல்லை – மகிந்தவிடம் கூறிய எஸ்.பி

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், 15 பேர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டணி அரசு குறித்து இதுவரை பேசவில்லை – மகிந்த

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசு – இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

கோத்தாவின் நிதி மோசடி வழக்கு – தினமும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நிதி முறைகேடு வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் தினவும் விசாரிக்கப் போவதாக, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் கூட்டுச் சேரமாட்டார் மைத்திரி – ஐதேக நம்பிக்கை

2015  அதிபர் தேர்தலுக்கு பின்னர், தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் கைதாகி பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.