மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐதேமுவுடனான பேச்சில் இழுபறி – மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய போதும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மகிந்தவை பதவி நீக்கக் கோரும் மனு மீது விசாரணை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை  – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது

சிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு  வரவுள்ளன.

மகிந்த அணியில் இருந்து வெளியேறினார் விஜேதாச – சுதந்திரமாக செயற்பட போவதாக அறிவிப்பு

அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து, கல்வி, உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல்  விஜேகுணரத்ன

கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன, சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது மகிந்த தரப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30  மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

ரணில் தான் பிரதமர் – ஐதேக நாடாளுமன்றக் குழு முடிவு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று,  ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மகிந்தவிடம்  கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரல் ரவீந்திரவின் பாதுகாப்பு அதிகாரி

கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்காக முன்னிலையான, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஒளிப்படம் பிடிக்க ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்கப்பட்டார்.