நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.
பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்தின் வசதிகளை தரமுயர்த்துவதற்கான பணிகள், இரண்டு சீன நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.