மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மைத்திரியின் குடியுரிமையும் பறிபோகும் – விஜித ஹேரத்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது – சட்டமா அதிபர் வாதம்

நாட்டினதும், ஆயுதப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரின் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதற்கு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய எதிர்ப்புத் தெரிவித்தார்.

மகிந்தவின் முறையீட்டு மனு தாக்கல்- பரிசீலனை இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக,  இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த, அமைச்சரவைக்கு எதிரான மனு – இன்று பிற்பகல் முக்கிய உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும், அமைச்சர்கள், இந்தப் பதவிகளை வகிப்பதற்கு  சட்டரீதியான உரிமையற்றவர்கள் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு மீது இன்று பிற்பகல் 3 மணிக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

பசில், கம்மன்பிலவுடன் ஒன்றாக நின்ற வசந்த சேனநாயக்க – இப்போது எந்தப் பக்கத்தில்?

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி

ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவில் சீனாவின் கடன்பொறி – ஜெனிவாவில் விவாதம்

சிறிலங்காவில் சீனாவின் கடன் பொறி தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலை பிரதமராக முன்மொழிந்தது ஐதேக – சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

சிறிலங்காவின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.