மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகள்

வடக்கு கிழக்கில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர், சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

வாயைக் கொடுத்து மாட்டிய பாதுகாப்புச் செயலர் – பதவியைப் பறிக்க சிறிசேனவுக்கு அழுத்தம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலுக்கு தயாராகுமாறு கோத்தாவுக்கு மகிந்த பச்சைக்கொடி

அதிபர் தேர்தலுக்குத் தயாராகுமாறு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.

ஜப்பானிய, அவுஸ்ரேலிய தூதுவர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ஜப்பானியத்  தூதுவர் அகிரா சுகியமாவும், சிறிலங்காவில் பணிக் காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள அவுஸ்ரேலிய  தூதுவர் பிரைஸ் ஹட்ச்ஸ்னும், நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

சிறிசேன படுகொலைச் சதித்திட்டம் – நாமல் ராஜபக்சவிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

முகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு

சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின்  அதிகாரிகள்  குழுவுடன்  நேற்று   பேச்சுக்களை நடத்தியுள்ளார்.  மஹிந்த ராஜபக்சவின்  இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

கோத்தா வழக்கின் போது அதிரடிப்படையினர் குவிப்பு – நீதிபதிகளிடம் முறையீடு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.