இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா
தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது.
அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமாகிய போது, இயந்திரக் கோளாறினால் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டிய இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்ரேலியா நோக்கில் செல்லும் வழியில் மோசமான காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகு மீண்டும் இந்தியாவுக்கே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவை நேற்றுக்காலை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்மநாபா ஈபிஆர்எல்எவ், தமது கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’, ‘விடுதலை’ ஆகிய சொற்களை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
லொசான் மாநகரசபைக்கு நேற்று (பெப்ரவரி 28) நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.