முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா இன்னமும் இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான – காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்கான அதிபர் ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும் அதனைக் கலைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.
சிறிலங்காவில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அதற்கான அவரது அர்ப்பணிப்பையும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற, மாகாணசபை, உறுப்பினர்கள் ஜெனிவாவில் குவிந்துள்ளனர்.
சிறிலங்கா படையினரை, ஐ.நா அமைதிப்படையில் மேலதிகமாக இணைத்துக் கொள்வதற்கு, சிறிலங்காவும் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.