மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா?

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி  இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

நியூசிலாந்தில் தீவிபத்துக்கு ஈழத்தமிழர்கள் மூவர் பலி – மூவர் படுகாயம்

நியூசிலாந்தின் சவுத் ஓக்லாந்தில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஈழத்தமிழர்கள் மூவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள

மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமனம்

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், இவரை இராஜாங்கச் செயலர் பதவிக்கு, நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் சிறிலங்கா அதிபர் தங்கும் விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அங்கு தங்கவுள்ள விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க மரைன் கொமாண்டோக்களைக் கவர்ந்த கரும்புலிப் படகு

கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர்.

தமிழர் தாயகத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள் – படங்கள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

யாழ்., வன்னியில் மாவீரர் நாளுக்குத் தயாராகும் துயிலுமில்லங்கள்

கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.