மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் நிலைமைகள் சிக்கலடையும் – யதீந்திரா

மகிந்த ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்மக்கள்  செயலாற்ற வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், அரசியல் ஆய்வாளரான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திரா

அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை,  தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

எதிரி பலவீனமடைந்துள்ள போது தான் குரல்வளையைப் பிடிக்க வேண்டும் – சேருவிலவில் யதீந்திரா

ஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளம் வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்றதே தமிழ்த் தேசியம் – யதீந்திரா

இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரான அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

பசிலுக்கு பக்கவாதம் தாக்கியதா? – நீதிமன்றத்தை ஏமாற்ற நடத்திய நாடகம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்திகள் பொய்யானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

போரின் இறுதிக்கட்டம் குறித்து ஐ.நா விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளித்தேன் – எரிக் சொல்ஹெய்ம்

வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா விசாரணைக் குழுவின் முன்பாக தாம் சாட்சியம் அளித்துள்ளதாக, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாகிறது சிறிலங்கா

சதுப்புநிலக் காடுகளை முழுமையாகப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாக சிறிலங்கா மாறவுள்ளது. இதற்கான திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கெரி வருகைக்கு முன்பாக மகிந்த ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவரும், அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அவரைத் தோற்கடிக்க, சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தவருமான, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி நேற்று கொழும்பில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த கடமைப்பட்டுள்ளது அமெரிக்கா – சூசன் ரைஸ்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில்- இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.