மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு

அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த 18 தொடருந்து பயணங்களில் ‘யாழ்தேவி’

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்துப் பயணங்களில் ஒன்றாக, கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி தொடருந்துச் சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மைத்திரி- ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு – அதன் பின்னரே அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது.

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடக்காது

வரும் மே 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.