மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்கா அமைச்சரின் மருமகனின் கொலைப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள்

அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து, இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்

சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன.

அதிபர் செயலணி விவகாரம்: கூட்டமைப்பு – விக்னேஸ்வரன் இடையே வெடித்தது கலகம்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.

அடுத்தவாரம் நேபாளத்தில் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்

சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜப்பானிய அமைச்சர்

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவச் செயற்பாடுகள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் நிலைப்பாடு என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா தெரிவித்துள்ளார்.

மத்தல குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு – சிறிலங்கா அமைச்சர்

மத்தல விமான நிலையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.