அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




