சிறிலங்கா கடற்படையின் அழைப்பை 35 நாடுகள் நிராகரிப்பு
கொழும்பில் சிறிலங்கா கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் சிறிலங்கா கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவின் அலைபேசியை தடயவியல் ஆய்வு செய்வதற்கு, சீன நிபுணர்களிடம் உதவி கோர சிறிலங்கா அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மூடிய அறைக்குள் தனியாக நடத்திய சந்திப்பின் போது, தன்னைக் கொல்ல ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே பேசப்பட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடக்கு மாகாண முதலமைச்சரும் ஏட்டிக்குப் போட்டியான, விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 185 எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, மன்னார் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் ஒரு உறுப்பினர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.