மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஒபாமாவின் வருகையை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிலங்கா – மங்கள சமரவீர  தகவல்

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கைது செய்வதை தடுக்கக் கோரி அட்மிரல் கரன்னகொட உச்ச நீதிமன்றில் மனு

தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில்,  சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அரசியல் உறுதியின்மையால் மோசமான நெருக்கடிக்குள் சிறிலங்கா – கோத்தா குற்றச்சாட்டு

அரசியல் உறுதியற்ற நிலை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, முடிவெடுக்கும் நடைமுறைகளில் உள்ள பலவீனம் ஆகியவற்றினால், நாடு இன்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு போட்டியாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

புதிய தீர்மான வரைவு குறித்து மார்ச் 5இல் ஜெனிவாவில் முதல் கலந்துரையாடல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய – சிறிலங்கா விமானப்படைத் தளபதிகள் சந்திப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.