தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவி நீக்கம்
சிறிலங்காவின் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிடம் இருந்து P 625 இலக்க போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படை நேற்று முன்தினம் ஷங்காய் கப்பல் கட்டும் தளத்தில், பொறுப்பேற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார்.
கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் அவுஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளவுள்ளார்.