கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் சர்ச்சை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய போர்க்கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிப்பதற்கும், எதிர்கொள்வதற்குமாற சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து, பீஜிங்கில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா விமானப்படை தளத்தில், உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான, Rosoborone சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.