மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்கருக்கும் இலங்கையருக்கும் இடையிலான போர் – ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ‘பென்டகன்’ – திறந்து வைத்தார் சிறிசேன

பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமையகத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை திறந்து வைத்தார்.

16 மாவட்டங்களில், 119 தொகுதிகளில் கோத்தாவின் வெற்றி உறுதி – என்கிறார் டலஸ்

வரும் அதிபர் தேர்தலில் 16 மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று, அவரது ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரும், கடைசியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படைத் தளத்தில் விசாரணைகளை நடத்துவதற்கு,  குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எம்சிசி உடன்பாட்டை பகிரங்கப்படுத்தினார் மங்கள – மகிந்தவுக்கும் சவால்

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் உடன்பாட்டின் வரைவை சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

21/4 தாக்குதல் – தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்திடம் இருந்து, 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்கான உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம் எனப்படும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.