மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பசில் ராஜபக்சவுடன் தொடர்பா? – நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மறுப்பு

சிறிலங்கா அரசாங்கம், தன்னுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக, எதிரணியினர் கூறிய குற்றச்சாட்டை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் மறுத்துள்ளார்.

மகிந்தவைத் தூக்கியெறியும் கொமன்வெல்த் – கொழும்பு ஆய்வாளர் எச்சரிக்கை

நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத் தலையீடுகளால் வடக்கில் வாக்களிப்பு குறையும் – கண்காணிப்பாளர்கள் அச்சம்

கடுமையான இராணுவப் பிரசன்னம் காரணமாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையலாம் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா கவலை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கவலை வெளியிட்டுள்ளார்.

சுழிபுரத்தில் அனந்தி வீட்டின் மீது அதிகாலையில் தாக்குதல்

தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்கார்டியன், ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டேன் – மைத்திரி உறுதிமொழி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து இராணுவத்தை  விலக்கிக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

வியாழன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம் – தோல்வி அச்சம் மகிந்தவைத் தொற்றியது

அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானொலி

சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.