நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த – கருத்து வெளியிட மறுக்கிறது ஐ.நா
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு வாரிசு களமிறங்கவுள்ளது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச, இந்த முறை நாடாளுமன்றத் தேரதலில் முதல் தடவையாக போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போட்டியில் குதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிப்பதா என்பது தொடர்பான தமது முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.