மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

குற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க.

தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.  

மகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம்

மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது.

ஒரு மாதமாகியும் மகிந்தவுக்கு வராத வாழ்த்துச் செய்தி

சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிந்த அணியின் இரட்டை வேடம் அம்பலம் – மேற்குலகுடன் இரகசிய பேரம்

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஆபத்தில் சிறுபான்மையினர் – வெளிநாட்டு தூதுவர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வெற்றிக் கொண்டாட்டம் – கேக் வெட்டிய மகிந்த

சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நேற்றிரவு அதிபர் செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டு காத்திருந்தால் மூன்றில் இரண்டு பலத்துடன் பிரதமராகியிருக்கலாம் – கோத்தா

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வீசியது மிளகாய் தூள் அல்லவாம் – நாடாளுமன்றக் கூத்துகள்

நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல, அது மென்பானங்களின் கலவையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.