மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நாடாளுமன்றக் கலைப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு

வடக்கு,கிழக்கு தமிழர் பிரச்சினைகளை கையாளக்கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில், தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒன்றிணையும் ஆளும், எதிர்க்கட்சிகள்

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் சமல் ராஜபக்ச

தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல்முறை மாற்றம் – மைத்திரியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது.

கூட்டுப்படைகளின் தளபதியாக எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமனம்

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ரட்ணசிறி, டி.எம்.ஜெயரட்ணவை ஆலோசகர்களாக நியமித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கிலுள்ள படையினரின் தொகையை வெளியிட இராணுவப் பேச்சாளர் மறுப்பு – பாதுகாப்பு இரகசியமாம்

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். பலாலியில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல் முறை மாற்ற யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை- சிறிலங்கா அரசாங்கம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.