மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி

சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி

சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.

சமூக ஊடகங்களே நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டை- சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர்

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும்,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிதாக பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தவுள்ளது சிறிலங்கா

வர்த்தக இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தன்- விக்னேஸ்வரன் விரைவில் நேரில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா கடற்படையை வலுப்படுத்த பிரான்ஸ் விருப்பம்

கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு பிரான்ஸ் உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜீன் மரின் சுப், தெரிவித்துள்ளார்.

தெற்கின் சதித் திட்டம் – பதிலளிக்காமல் நழுவிய முதலமைச்சர்

வடக்கு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, தெற்கிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது, அதுபற்றிப் பேசுவதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – இறக்குமதிக்குத் தயாராகிறது சிறிலங்கா அரசு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 வீதம் அறுவடை குறையும் என்று ஐ.நா உணவு விவசாய நிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறிலங்காவில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு விசாரணை நடத்தும், வழக்குத் தொடுக்கும் அதிகாரம் இல்லை

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரமோ, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.