மேலும்

97 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது

சிறிலங்கா அரசாங்கத்தின், 2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, இன்று நாடாளுமன்றத்தில், 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்; 60 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். எவரும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவில்லை.

வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான திலித் ஜயவீர, நயன வசலதிலக, காதர் மஸ்தான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *