மேலும்

இந்தியத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து விசாரித்த மோடி

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும்  இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இதுபற்றி விசாரித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்திய நிதியுதவியுடனான திட்டங்கள் மற்றும் முதலீடுகள்  குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாக, சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீளமைப்குத் திட்டங்களின் நிலை குறித்தும், கூடுதல் உதவி தேவையா என்றும், இந்தியப் பிரதமர் விசாரித்ததாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *