மேலும்

நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியன் உரை எதிர்ப்பினால் ரத்து

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் குழுக்கள், கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ச உரையாற்ற  வழங்கப்பட்ட வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறும் அவை கோரிக்கை விடுத்திருந்தன.

எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களை அடுத்து, ஏற்பாட்டாளர்கள் கேம்பிரிட்ஜ் யூனியன் விரிவுரையை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *