மேலும்

ஒரே நாளில் கொழும்பு வந்த இந்திய, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்

பாகிஸ்தான் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் ஒரே நாளில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளன.

விநியோகத் தேவைகளுக்காக  நேற்று முன்தினம்கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான பிஎன்எஸ் சாய்ப் (PNS  SAIF) நேற்று துறைமுகத்தை விட்டு புறப்பட்டது.

123 மீட்டர் நீளமான இந்த போர்க்கப்பலின் மாலுமிகள், கொழும்பில் தங்கியிருந்த போது, சுற்றுலா தலங்களை பார்வையிட்டிருந்தனர்.

அதேவேளை,  இந்திய கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் சுகன்யா  நேற்று முன்தினம் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படை, இந்திய கப்பலை வரவேற்றது.

ஐஎஸ்எஸ் சுகன்யா, 101 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கடல்சார் ரோந்து கப்பலான கொமாண்டர் சந்தோஷ் குமார் வர்மாவின் கட்டளையில் இயங்குகிறது.

இந்தக் கப்பல், நாளை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து  புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *