கேணல் கெலும் மத்துமகேவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
கேணல் கெலும் மத்துமகே தாக்கல் செய்த ரிட் மனுவை நேற்று மறுபரிசீலனை செய்த பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி அவரைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை, நவம்பர் 11 ஆம் திகதி வரை நீடித்து,மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுஉத்தரவிட்டது.
அடுத்த விசாரணை திகதிக்கு முன்னர் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.