நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்
நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி சிக்கல்கள் காரணமாக நீதி பாதிக்கப்படுமானால், அது நாட்டிற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்று, மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினரும் ஆணையாளருமான நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நீதியை வழங்குவதற்கும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் நிதித் தடைகள் இருக்க கூடாது.
நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான செலவு ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகும்.
இது பொதுமக்களின் நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை பலப்படுத்துகிறது.
இந்த நோக்கத்திற்காக போதுமான நிதியை ஒதுக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.