மேலும்

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வு பகிர்வு உடன்பாடு

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வுப் பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சிறிலங்காவின் நிதிப் புலனாய்வு அலகும், ஓமான் நிதி தகவல்  தேசிய  மையமும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

லக்சம்பேர்க்கில்  கடந்த ஜூலை 9ஆம் திகதி இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளின்படி, பணமோசடி தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான நிதி புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள நிதி புலனாய்வு பிரிவுகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் சர்வதேச சகாக்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நுழைகின்றன.

பணமோசடி தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

இது பெரும்பாலும் சிக்கலான எல்லை தாண்டிய குற்றவியல் வலையமைப்புகளை உள்ளடக்கியது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *