மேலும்

மைத்திரியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம் – மகிந்தவுக்கும் பாராட்டு

john_kerryசிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ வெற்றிகரமாக ஒரு அதிபர் தேர்தலை அமைதியுடன் நிறைவு செய்த சிறிலங்கா மக்கள் அதற்காகப் பாராட்டுக்குரியவர்கள்.

அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருக்கிறது.

குழப்பம் ஏதும் ஏற்படாமல், பரப்புரையை ஒட்டிய வன்முறைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டும் விதத்தில், இந்தத் தேர்தலை உறுதிப்படுத்திய தேர்தல்கள் ஆணையாளர், பாதுகாப்புப் படைகள், சிவில் சமூகம், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட் வேட்பாளர்கள் ஆகிய தரப்பினரை அமெரிக்கா பாராட்டுகிறது.

எதிர்வரும் நாள்களிலும் இந்தப் போக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியமானது.

மக்களின் தீர்ப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அதிகாலையில் அதிபர்  மகிந்த ராஜபக்‌ச கூறியது முன்னேற்றப் பாதையில் முக்கியமானது.

அதிகாரத்தை அமைதியாகவும், சாதாரணமான முறையிலும் கையளிக்கும் பெருமைமிகு பாரம்பரியத்தைப் பின்பற்ற முன்வந்தமை மூலம் தேர்தல் முடிவுகளை மதித்து ஏற்றுக்கொண்ட அதிபர் மகிந்த ராஜபக்‌சவை பாராட்டுக்குரியவர்.

அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன தமது பரப்புரை மேடைகளில் குறிப்பிட்டவாறு அமைதியான, எதிர்ப்பார்ப்புக்களையும் அரவணைத்து, சுபீட்சமான இலங்கையை உருவாக்கும் நடவடிக்கையில் அவருடனும் அவரது அரசுடனும் இணைந்து பணியாற்றி அமெரிக்கா காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *