மேலும்

மைத்திரியை இந்தியா வருமாறு மோடி அழைப்பு

Narendra-Modiசிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து. இன்று காலை இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறினார்.

அத்துடன் இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நரேந்திர மோடி கூறியள்ளார்.

தொலைபேசி மூலம், வாழ்த்துக் கூறிய மோடி பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு அயல் நாடு, நெருங்கிய நண்பன் என்ற வகையில், சிறிலங்காவின் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் இந்தியா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியாகவும், ஜனநாயக தேர்தல் செயல்முறையை கடைப்பிடித்த சிறிலங்கா மக்களுக்கும் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார்.

அமைதியானதும், சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியழுப்புவதற்கான அடித்தளம், காத்திரமான, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலேயே உள்ளது என்றும், மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு வருமாறும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நரேந்திர மோடி.

இதற்கிடையே, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் ராம் மாதவ் மற்றும், பாஜக பேச்சாளர் அக்பர் ஆகியோரும், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி குறித்து மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *