மேலும்

19 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்- கடந்த ஆண்டை விட குறைவு

2026-ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனைக் கடந்துள்ளது.

நொவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 49,900-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இருப்பினும், மிக முக்கியமான குளிர்கால பருவம் நெருங்கி வரும் நிலையில், இந்த வருகை வீதம் கடந்த ஆண்டின் அளவை விடக் குறைவாகவே உள்ளது.

சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் 8-ஆம் நாள் வரை மொத்தம் 49,929 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது நாளொன்றுக்கு சராசரியாக 6,241 பயணிகள் என்ற விகிதத்தில், ஒட்டுமொத்த வருகை எண்ணிக்கையை 1,912,233 ஆக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், நொவம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் பதிவான வருகை எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8.78% சரிவைக் கண்டுள்ளது.

அதேபோல், ஒட்டுமொத்த வருகை எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 1.7% குறைவாகவே உள்ளது.

இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது; நொவம்பர் மாதத்தில் இதுவரை வருகை தந்தவர்களில் 12,401 பேர் (25%) இந்தியர்கள் ஆவர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிலிருந்து 5,483 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,541 பேரும் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது, சிறிலங்காவின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 512,026 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்; இந்த மைல்கல்லை எட்டிய முதல் சந்தை இதுவாகும்.

பிரித்தானியா 176,670 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், சீனா 125,326 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *