அதிக குற்றப் பதிவைக் கொண்ட நாட்டையே கைப்பற்றியுள்ளோம்
அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினார் 20,000 க்கும் மேற்பட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன அல்லது தொடங்கப்பட உள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்.
மேலும் அவர்கள் அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க வேண்டுமென்றால், எங்களுக்கு இன்னும் நான்கு முதல் ஐந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் தேவை.
குறுகிய காலத்தில் இந்தக் குற்றங்கள் அனைத்தையும் விசாரிப்பது சாத்தியமற்றது.
இருப்பினும், பாதாள உலக வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய பல நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகள் சீராக முன்னேறி வருகிறது.
இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில், கொலையாளிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் மற்றும் உத்தரவுகளை வழங்கியவர்களும் அடங்குகின்றனர்.
அவர்களில் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்களும் அடங்குவர்.
பழைய வழக்குகளில் இருந்து, குறிப்பாக 2012 ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் இருந்து ஆதாரங்களை வெளிக்கொணர்வது, அந்த நேரத்தில் தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லாததால் சவாலாக இருந்தது.
ஆனால் புலனாய்வாளர்கள் அந்த விசாரணைகளைத் தொடர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
மறைக்கப்பட்ட ஆதாரங்களை மீண்டும் அம்பலப்படுத்துவது ஒரு கடினமான பயணம்.
ஆனால், அதிகாரிகள் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர், மேலும் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.