பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த உதயகுமார் யுகதீஸ் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இன்று முற்பகல் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இடம்பெற்றது.
இதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் மற்றும் கனகரத்தினம் சிறிகாந்தரூபன் ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
20 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு தலா 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவிற்கு 2 உறுப்பினர்களும், ஈபிடிபிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.