கொழும்பு மாநகர முதல்வர் தெரிவு- சட்டப்போரில் இறங்கும் எதிர்க்கட்சி
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜயசுந்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை முதல்வர் தெரிவில் பொதுநிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டு முறைகளைப் பின்பற்றத் தவறியதாக அவர் மீது ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், சஜித் பிரேமதாச தலைமையில், நேற்று மாலை நடந்த சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் சட்ட நிபுணர்களும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி ஆணையாளர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இரகசிய வாக்கெடுப்பு நடத்தியது றித்து, இந்தக் கூட்டத்தில் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சாரங்கிக ஜயசுந்தர மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.
வரும் நாட்களில் முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பாக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.