யாழ்.குடாநாட்டில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை திடீரென வாகனங்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை திடீரென எரிபொருள் நிலையங்களை நோக்கி வாகனங்கள் படையெடுக்கத் தொடங்கியதால், அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசைக்கு வாகனங்கள் காத்திருக்கின்றன.
எரிபொருள் கையிருப்பு போதுமானளவில் இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் பதற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குடாநாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பலர் கொள்கலன்களிலும் எரிபொருளை சேமித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு போர் நிலவரங்களினால் இந்த பதற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.