மேலும்

நாள்: 2nd March 2020

ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல் – அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் – அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைப்பு

இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உருவானது சஜித் தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரங்களில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சஜித் கூட்டணி உருவாக்கும் நிகழ்வை புறக்கணிக்கிறார் ரணில்

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.

யானைக்கே ஐதேக செயற்குழு ஆதரவு – சஜித் முரண்டு

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.

சிறிலங்காவில் கொரோனா கண்காணிப்பில் 16 பேர்

கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கைக்கு வந்தது கலைக்கும் அதிகாரம்

நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.