கோத்தாவுடனான பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்தது – மோடி
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சந்திப்புத் தொடர்பாக கீச்சகத்தில் அவர் இட்டுள்ள பதிவு ஒன்றில்,
‘இன்றைய பேச்சுக்கள் மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்தன. பல்வேறு இருதரப்பு மற்றும் பூகோள விவகாரங்கள் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
சிறிலங்காவிலுள்ள எமது சகோதர சகோதரிகளின் அபிவிருத்தி அபிலாசைகளுக்கு ஆதரவளிப்பதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை இட்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.