அமைச்சர் பதவியில் இருந்து அஜித் பெரேராவும் விலகினார்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேராவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைச்சர் பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அவர் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
ஏற்கனவே, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹரின் பெர்னான்டோ ஆகியோரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.