தோல்வியை ஏற்றுக் கொண்டார் சஜித் – கோத்தாவுக்கு வாழ்த்து
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, தமது அரசியல் ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
தோல்விக்குப் பொறுப்பேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், எவ்வாறாயினும் மக்களை சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.