மேலும்

ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள்

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரசார செலவு 3108 மில்லியன் ரூபா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஐந்து வேட்பாளர்கள் ஒக்ரோபர் 14இற்கும், நொவம்பர் 10இற்கும் இடைப்பட்ட காலத்தில், 3108 மில்லியன் ரூபாவை தேர்தல் பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

83 பேருக்கு வேலைவாய்ப்பு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் 83 ஆயிரம்  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிக்கு 1300 பேருந்துகள்

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பணிகளுக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று சிறிலங்கா போக்குவரத்துச் சபை 1300 பேருந்துகளை வழங்கவுள்ளதாக போக்குவரத்துச்சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நான் அமெரிக்காவில் பிறக்கவில்லை

அமெரிக்க குடியுரிமை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, மாத்தறையில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தான் மாத்தறை, பாலத்துவவிலேயே பிறந்தேன், அமெரிக்காவில் அல்ல என்று, தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மீது நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறி பக்கசார்புடன் செயற்பட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பிரசாரத்தில் புலிகளின் பாடல்

அம்பாறை- கல்முனையில்  சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய பரப்புரைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிக்க விட்ட இளைஞன் ஒருவர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்தவின் மகள் மேல்முறையீடு

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்துள்ளார்.

சுமந்திரன் முறைப்பாடு

சிங்களவர்களைத் தோற்கடிப்பதற்காக, சஜித்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியுள்ளார் என போலிச் செய்தியை வெளியிட்ட சிலோன் ருடே, மௌபிம, அருண ஆகியே மூன்று நாளிதழ்களுக்கு எதிராக சுமந்திரன் காவல்துறை மா அதிபரிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *