சிறிலங்கா முழுவதும் உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு
சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று மாலை 6 மணி தொடக்கம், நாளை காலை 6 மணி வரை ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், நாட்டின் பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக காவல்துறை ஊடரங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்குச்சட்டம் எப்போது நீக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.